கனடாவில் மான் குட்டியினால் தொழிலை இழந்தவர்
கனடாவில் மான் குட்டியினால் நபர் ஒருவர் தொழிலை இழக்க நேரிட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிக்அப் ட்ரக் வண்டியொன்றில் முன் ஆசனத்தில் மான் குட்டியை ஏற்றிச் சென்ற நபர் தொழிலை இழக்க நேரிட்டுள்ளது.
வீதியில தனித்து நின்றிருந்த மான் குட்டியை குறித்த சாரதி பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும் இந்த செயற்பாடானது காட்டுத் தீ சட்டங்களை மீறும் வகையிலானது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மான் குட்டி தாய் இன்றி வீதியில் நிர்க்கதியாக நின்றதாகவும், வாகனங்களில் மோதுண்டு விடும் என்ற அச்சத்தினாலும் மான் குட்டியை மீட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக சாரதி தெரிவிக்கின்றார்.
எனினும், சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி மார்க் ஸ்காகே என்ற நபரை ஏ.எப்.டி பெற்றோலியம் நிறுவனம் பணி நீக்கியுள்ளது.