கனடிய மாகாணமொன்றில் நாளொன்றுக்கு 6 மரணங்கள் பதிவு;எதனால் தெரியுமா!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் போதை மருந்து காரணமாக நாளொன்றுக்கு ஆறு பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் போதை மருந்து பயன்பாடுகள் காரணமாக 1158 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும், இது கடந்த ஆண்டை விடவும் ஒன்பது வீதம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
நாள்தோறும் போதை மருந்து பயன்பாடு காரணமாக மரணங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் போதை மருந்து பயன்பாடு காரணமாக 181 பேரும் ஜூன் மாதம் 1985 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
சராசரியாக மாகாணத்தில் நாளொன்றுக்கு சுமார் ஆறு மரணங்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
போதை மருந்து மாத்திரைகள் விசமாகும் சந்தர்ப்பங்கள் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 10 முதல் 59 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கள் கொலைகள், தற்கொலைகள் இயற்கை, காரணிகள் போன்றவற்றின் மரண எண்ணிக்கையை விடவும் மித மிஞ்சிய போதை மருந்து பயன்பாடு காரணமான மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மற்றும் மே மாதங்களில் பதிவான மரணங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 30 முதல் 49 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழந்தவர்களில் சுமார் 72 வீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.