புடின் தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பு நிறைவேறியது!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னமே பாபா வங்கா (Baba Vanga) விளாடிமிர் புடின் (Vladimir Putin) தொடர்பில் குறிப்பிட்டுள்ள கணிப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போர் ஒருமாதத்தை கடந்து நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் ரஷ்யா, உக்ரைமீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
எனினும் ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கீவ் நகரில் ரஷ்யப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கியுள்ளதுடன், அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னமே பாபா வங்கா விளாடிமிர் புடின் (Vladimir Putin) தொடர்பில் குறிப்பிட்டுள்ள கணிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாட்டவரான பாபா வங்கா (Baba Vanga) 50 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் இயற்கை பேரிடர் மற்றும் போர்கள் ஏற்படுவதற்கு முன்பு அவை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், புடின் (Vladimir Putin) மற்றும் ரஷ்யா தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்த கணிப்புகள் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேசமயம் ரஷ்யாவும் விளாடிமிர் புடினும் (Vladimir Putin) உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என பாபா வங்கா கணிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.