கட்டாரின் எல்.என்.ஜி கப்பல் மீதான தாக்குதலுக்கு பஹ்ரைன் கடும் கண்டனம்
கட்டார் கேஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 'அல் மயேதா' (Al Mayeda) என்ற திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றிச்சென்ற கப்பல் மீது வளைகுடா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பஹ்ரைன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்தத் தாக்குதலானது கடல்சார் பாதுகாப்பு, கடல் சார் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன், சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட உடன்படிக்கையை மீறும் செயல் என்றும் பஹ்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.

கத்தாரின் பாதுகாப்பு, முக்கிய நலன்கள், கப்பல்கள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக அந்த நாடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பஹ்ரைன் தனது முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்யவும் சர்வதேச சமூகம், குறிப்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஹ்ரைன் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நீர்வழிகளில் கப்பல்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதன் மூலமே உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தக சீரான நிலை மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பேணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.