கனடாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
கனடாவில் எட்டோபிகோக்கில் நெடுஞ்சாலை 427 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய 4 பேரும் பங்களாதேஷைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள், எனவும் அவர்கள் கல்வி கற்பதற்கான அனுமதியில் ரொறன்ரோவில் வசித்து வந்ததாக கெர்ரி ஷ்மிட் கூறுகிறார்.
உயிரிழந்த 3 பேரும் காரில் பயணித்தவர்கள் எனவும், 20 மற்றும் 17 வயதுடைய ஆண் இருவரும், 20 வயதுடைய பெண் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 21 வயதுடைய ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் கடந்த திங்கட்கிழமை (13-02-2023) இரவு 11:30 மணியளவில் டன்டாஸ் தெருவிற்கு செல்லும் தெற்கு நெடுஞ்சாலை 427 வளைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து மற்றும் வாகனம் தீப்பற்றிய தகவல் கிடைத்ததும், அவசரக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
ஒரு கார் வளைவில் அதிக அதிவேகத்தில் பயணித்ததாகவும், கார் அது சாலையை விட்டு வெளியேறி கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பிடித்த வாகனத்தில் இருந்த நான்கு பேரையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முன்பக்கத்தில் இருந்த பெண் பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விபத்துக்கான சரியான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.