கனடாவில் வட்டி வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முக்கிய வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகளால் குறைத்து 2.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
உலக வர்த்தகத் தடைகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாகி வரும் நிலையில், இந்த வட்டி விகிதக் குறைப்பை பொருளாதார நிபுணர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலைகள் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 1.9 சதவீதம் உயர்ந்திருந்ததாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் முதல் முறை இதுவாகும்.
கனடாவின் பலவீனமான தொழில்சந்தை நிலையும், அமெரிக்க வரி விதிப்பிற்கான எதிர்வினை நடவடிக்ககைளும் இந்த வட்டி குறைப்புக்கான ஏதுக்கள் என கனடிய மத்திய வங்கி ஆளுநர் டிஃப் மாக்லெம் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் பலவீனமடைந்துள்ள நிலையில், பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் குறைந்துள்ளதால், வட்டி விகிதத்தை குறைப்பது சரியான முடிவு என நாங்கள் கருதினோம் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 1.5 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்க சுங்க வரிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மைகளினால் ஏற்றுமதிகள் 27 சதவீதம் வீழ்ச்சி கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.