650 பெண்களை இரகசிமாக படம் பிடித்த நபருக்கு தண்டனை!

British Columbia
By Kamal May 22, 2026 06:47 AM GMT
Report

 கனடா வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிகளவிலான பெண்களை ரகசியமாகப் படம் பிடித்த வழக்கில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சானிச் (Saanich) பகுதியைச் சேர்ந்த 39 வயது நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

விக்டோரியா பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யின் யெங் டெரெக் சான் என்ற இந்த நபர், 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

650 பெண்களை இரகசிமாக படம் பிடித்த நபருக்கு தண்டனை! | Bc Man Pleads Guilty In Largest Voyeurism Case I

சானிச் காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2024 ஜனவரி 16 அன்று, பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் சானிச் பகுதியிலிருந்து பதிவேற்றப்பட்ட ஆபாச மற்றும் ரகசியப் புகைப்படங்களை விசாரணை செய்யும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டறிந்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கியது.

விசாரணையில், டெரெக் சான் ஏற்கனவே உடை மாற்றம் அறை ஒன்றில் பெண்ணைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து பிடிபட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஏப்ரல் 11, 2024 அன்று அவரது வீட்டில் வைத்து சான் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களில் ஆயிரக்கணக்கான புகைப்படங்களும், 28 மணி நேரத்திற்கும் அதிகமான வீடியோக்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

கடற்கரைகள், வணிக வளாகங்கள் மற்றும் சில சமயங்களில் வீடுகளின் ஜன்னல்கள் வழியாகவும், பெண்களின் அனுமதியின்றி இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சில சர்வதேச இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் சோதனையின் மூலம் இந்த வீடியோக்களில் மொத்தம் 652 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் பொலிஸார் பேசியுள்ளனர்.

டெரெக் சான் நீதிமன்றக் கட்டுப்பாடுகளை மீறியது, ஆபாசப் படங்களை வெளியிட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 2025 அக்டோபரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வியாழக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், இவருக்கு நான்கரை ஆண்டுகள் (4.5 Years) சிறைத்தண்டனை விதித்து விக்டோரியா மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏற்கனவே அவர் காவலில் இருந்த காலத்தைக் கழித்து, இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இவரது டி.என்.ஏ மாதிரியைத் தேசிய பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US