கனடாவில் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு வெளியேற்ற உத்தரவு
கனடாவின் மத்திய பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள இரண்டு காட்டுத்தீகளை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் நைட் விஷன் ஹெலிகாப்டர் உட்பட நவீன உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
கரிபூ பிராந்திய நிர்வாகம், அனாஹிம் ஏர, நிம்போ ஏரி, சார்லோட் ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெளியேற்ற உத்தரவு மற்றும் எச்சரிக்கை அறிவித்தது.
டஸ்டி லேக் காட்டுத்தீயினால் சுமார் 53 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி, அணைக்க கடினமாக உள்ளது.
பல வாரங்களாக நீடித்த சூடான வானிலை காரணமாக காடு மிகவும் உலர்ந்த நிலையில் இருப்பதே முக்கிய சவாலாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீயை அணைக்கவும், பீஃப் ட்ரெயில் கிரீக் காட்டுத்தீயை (100 சதுர கிலோமீட்டருக்கும் அதிக பரப்பளவு) கட்டுப்படுத்தவும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் எரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் 53 காட்டுத் தீகள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.