பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு தண்டனை
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஓருவருக்கு நீதிமன்றம் 18 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கு 2019 முதல் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
37 வயதான அலெக்சான்ட்ரா ஜோய் சௌ என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த சிறைத் தண்டனை, கனடாவில் அமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் அறிவிக்கபபட்டுள்ளது.
பண மோசடி தொடா்பான வழக்கு விசாரணையில் தண்டனை விதிக்கப்பட்டதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். 2019 இல் தொடங்கிய இந்த விசாரணை சட்டவிரோத சூதாட்டம், கடன் சுரண்டல் மற்றும் பணமோசடி தொடர்பாக நடத்தப்பட்டது.
இதுவே பத்தாண்டுகளில் முதல் முறையாக பணமோசடி குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வழக்காகும். 2021 நவம்பரில் கைது செய்யப்பட்ட சௌ, மொத்தம் 828,000 டொலருக்கும் அதிகமான பணத்தை மோச செய்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பெண்ணிடமிருந்து மூன்று ஆடம்பர வாகனங்கள், 50,000 டொலர் மதிப்புள்ள இரண்டு வங்கி வரைவோலைகள் மற்றும் 10,000 டொலருக்கும் மேல் ரொக்கப்பணம் என்பன பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டது. இந்த அனைத்தும் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.