முக்கிய கலந்துரையாடலில் பைடனும் வியட்நாம் அதிபரும்!
சீனாவின் சர்வதேச செல்வாக்கைத் தடுக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது” என்ற விடயத்தை பைடன் மறுத்துள்ளார்.
வியட்நாமுடன் வரலாற்று ரீதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே இந்த மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறி 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் முன்னால் எதிர்ப்பை தடுத்து நெருக்கமாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவே பைடன் ஹனோய் சென்றுள்ளார்.
ஒற்றுமையை வெளிக்காட்டுவதற்காக பைடனும் வியட்நாம் அதிபர் வோ வான் துவாங் உம் ஹனோய் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
வியட்நாம் பிராந்தியத்தில் அதிகளவு இடம்பெறும் சீன செல்வாக்கின் பின்புலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் வியட்நாம் ஜனாதிபதி துவாங் ஆகியோர் வணிகம், பொருளாதார உறவுகள் மற்றும் வியட்நாமின் அபிலாஷைகளை 2045க்குள் உயர் வருமானம் கொண்ட நாடாக ஆக்குவது குறித்து விவாதித்தனர்.
புதிய யு.எஸ் - வியட்நாம் விரிவான மூலோபாயக் கூட்டாண்மையின் கீழ் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் வியட்நாமின் தூய்மையான ஆற்றல் மாற்றத் திட்டம் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் பேச்சுவார்த்தைகள் மற்றும் நவம்பரில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைவர்கள் கூட்டத்தின் போது சாதகமான முடிவுகளை அடைவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.