நாடு முழுவதும் மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை நடத்த உள்ள செவிலியர்கள்
ஊதிய விவகாரம் தொடர்பாக முதல் தேசிய நடவடிக்கையாக பிரிட்டன் முழுவதும் வேலைநிறுத்தம் முன்னெடுக்க செவிலியர்கள் வாக்களித்துள்ளனர்.
ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் (RCN) உறுப்பினர்கள் சுமார் 300,000 பேர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆனால், வேலைநிறுத்தம் தொடர்பில் போதுமான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்கத்தை விட 5% ஊதிய உயர்வை RCN கோரிவருகிறது. சில வாரங்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, பொதுச் செயலாளர் பாட் கல்லன் தெரிவிக்கையில்,
எங்களின் வேலைநிறுத்தம் செவிலியர்களைப் போலவே நோயாளிகளுக்கும் பொதுவானது, எங்களுக்கு அவர்களின் ஆதரவு உள்ளது என்றார். செவிலியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான உண்மையான திட்டம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் என்றே கூறப்படுகிறது.
குறித்த வேலை நிறுத்தமானது பிரதமர் ரிஷி சுனக் மற்றும் சேன்ஸலர் ஜெரமி ஹன்ட் ஆகியோர் பொது நிதியில் £50 பில்லியன் வெற்றிடத்தை சமாளிப்பதற்கான பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையிலேயே முன்னெடுக்கப்பட இருக்கிறது.