பறவைகாய்ச்சலால் 47 புலிகள் உயிரிழப்பு!
வியட்நாம் மிருகக்காட்சிசாலையில் பறவைகாய்ச்சல் காரணமாக 47 புலிகள் உயிரிழந்துள்ளன என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் 47 புலிகள் உயிரிழந்துள்ளதுடன் மூன்று சிங்கங்களும் இறந்துள்தாகவும் மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹோசிமின் நகருக்கு அருகில் உள்ள வூன்சோய்உயிரியல் பூங்கா மற்றும் லோங் ஒன் மாகாணத்தில் உள்ள மைகுயின் சபாரி பூங்காவிலும் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது.
பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சியை உண்ட விலங்குகள் நோய்வாய்ப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த புலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட இரண்டு மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது,என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.