அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை
அமெரிக்கா பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக அமெரிக்காவில் 168 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டதனால் முட்டை விலைகள் உயர்ந்துள்ளன.
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் கிட்டத்தட்ட 1,000 பால் பண்ணைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத பகுதிகளில் கோழிப்பண்ணைத் தொழில் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாக குளோபல் வைரஸ் நெட்வொர்க் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் , COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் மறுமொழி அலுவலகம், டிரம்ப் நிர்வாகம் பதவியேற்றதிலிருந்து, நிதியுதவி இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.