Cryptocurrency; சீன பெண்ணை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம்
மிகப் பெரிய கிரிப்டோகரன்சி (Cryptocurrency) பணச் சலவை வழக்கில், $6.7 பில்லியன் மோசடியில் ஈடுபட்டதாக அறியப்பட்ட சீனப் பெண் ஒருவரை லண்டன் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. '
செல்வத்தின் தெய்வம்' (God of Wealth)என அழைக்கப்பட்ட ஷிமின் கியான் (Zhimin Qian) என்ற 47 வயதான குறித்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
அதன்படி கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீனாவில் 128,000 முதலீட்டாளர்களை ஷிமின் கியான் மோசடி செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடி செய்த பணத்தை அவர் பிட்கொயினாக (Bitcoin) மாற்றியுள்ளதுடன், பின்னர், அவர் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு தப்பி ஓடியுள்ளார்.
பிரித்தானிய காவல்துறையிடம் இருந்து 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஷிமின் கியானை, நீண்ட மற்றும் சிக்கலான விசாரணைக்குப் பிறகு லண்டன் காவல்துறை கைது செய்தது.
அதேவேளை இந்த வழக்கு, உலகிலேயே அதிக மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.