சீனாவில் விநோத விவாகரத்து; கோழியால் பிரிந்த குடும்பம்
சீனாவில் வினோதமான சர்ச்சை ஏற்பட்டு தம்பதி விவாகரத்து செய்த சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.
தம்பதிகள் தங்கள் பண்ணையில் வளர்த்த 29 கோழிகளை எப்படிப் பிரிப்பது என்பதில் அவர்களுக்குள் கடும் விவாதம் ஏற்பட்டது. கணவன் மனைவி இருவரும் கோழிகளைப் பராமரிப்பதில் தாமே அதிகம் கவனம் செலுத்தியதாக வாதிட்டனர்.
அப்பாவி கோழி பலியானது
இந்நிலையில் பிரச்சினைக்குத் தீர்வாக 28 கோழிகளைச் சரிசமமாகப் பிரித்துக்கொண்டு எஞ்சிய ஒரு கோழியைச் சமைத்து இருவரும் பிரியாவிடை உணவாகச் சாப்பிடும்படி நீதிபதி கூறியுள்ளார்.
நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட கணவனும் மனைவியும் அவர் ஆலோசனைபடியே செய்தனர். சம்பவம் குறித்துச் சமூக வலைத்தளத்தில் "நீதிபதியின் தீர்ப்பு நியாயமனது.
அப்பாவி கோழி பலியானது" எனச் சிலர் கருத்துப் பதிவிட்டனர். விளம்பரம் அதேவேளை சீனாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 3.6 மில்லியனுக்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது.