அமெரிக்க விமானப்படை தளத்தின் ஆயுத கிடங்கில் வெடிவிபத்து
ஜப்பானிய தீவான ஒகினாவாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய விமான தளத்திற்குள் அமைந்துள்ள இவ் ஆயுத சேமிப்பு கிடங்கானது போர்க்காலத்தில் வெடிக்காத வெடிமருந்துகளை வைக்கப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஜப்பானிய மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இணைந்து சேதத்தின் அளவை தொடர்ந்து மதிப்பிட்டு வருவதால், கடேனா விமானப்படை தளம் சேதம் தொடர்பான முறையான அறிக்கையை வெளியிடவில்லை.
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் அமைந்துள்ள கடேனா விமானப்படை தளம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய மற்றும் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க விமானப்படை தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.