மொன்றியாலில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
கனடாவின் மொன்றியாலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லனோடியேர் (Lanaudière) பிராந்தியத்தில், ஒரு ஏரியில் டிராக்டர் மூழ்கிய விபத்தையடுத்து, ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாண காவல்துறையினர், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஏரியைச் சுற்றியுள்ள பாதையில் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த இருவரும் டிராக்டரில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சமயத்தில் டிராக்டர் திடீரென ஏரிக்குள் மூழ்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பான தேடுதல் நடவடிக்கை புதன்கிழமை இரவு செயின்ட்-செனோன் (Saint-Zénon) பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
விபத்தை நேரில் கண்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் புதன்கிழமை மாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தேடுதலில் தீயணைப்பு வீரர்களும், நீருக்குள் செயல்படும் டைவிங் குழுவும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மரண விசாரணை அதிகாரி விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், இதில் எந்தவித குற்றச்செயல் சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.