இஸ்லாமாபாத் மண்டபமொன்றில் பாரிய குண்டுவெடிப்பு; 31 பேர் பலி ..169 பேர் காயம்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மண்டபமொன்றில் இன்று (6) இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் வெளியாகியுள்ளது.
ஷியா சமூகத்தினர் ஒன்றுகூடும் மண்டபத்தில் மக்கள் கூடியிருந்தபோதே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மண்டப கட்டடத்தின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்ததாகவும் மீட்புப் பணியினர் சடலங்களை வெளியே கொண்டுசெல்லவும் காயமடைந்தவர்களை மீட்கவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்நகரில் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் அதேவேளை இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தரப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.