ஐரோப்பா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்
ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கமான ஒளிபரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (06) விடுக்கப்பட்ட இந்த மிரட்டல்களில், “நேரம் முடிவடைகிறது” என்ற எச்சரிக்கையும் இடம்பெற்றிருந்ததாக அயர்லாந்தின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான RTÉ, பிரித்தானியாவின் Sky மற்றும் பல்கேரியாவின் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான Nova TV உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இந்த மிரட்டல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து, அயர்லாந்தின் டப்ளினில் அமைந்துள்ள RTÉ நிறுவனத்தின் பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதுடன், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக, RTÉ தனது வழக்கமான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி, இசை மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அறிவிப்புகளை ஒளிபரப்பியது. இந்த நிலைமை சில சந்தர்ப்பங்களில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மிரட்டல் விடுக்கப்பட்ட எந்தவொரு இடத்திலும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வானூர்தி போக்குவரத்துத் துறையிலும் போலியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட சம்பவங்களும், பல்பொருள் அங்காடிகள் மீதான இணையவழித் தாக்குதல்களும் இதற்கு முன்னர் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.