கிழக்கு காங்கோவில் தொடரும் வன்முறை ; ஒரே தாக்குதலில் 33 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமமொன்றில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆயுதக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் சிவில் சமூக அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

தாக்குதலின்போது பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு காங்கோவில் ஆயுதக் குழுக்களின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அண்மைய தாக்குதல் அப்பகுதியில் பாதுகாப்பு நிலைமை தொடர்பான அச்சத்தையும் கவலையையும் மேலும் அதிகரித்துள்ளது.