அமெரிக்காவிற்கு கனடாவில் வலுக்கும் எதிர்ப்பு
அமெரிக்காவிற்கு கனடாவில் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படும் போது எதிர்ப்பு வெளியிடும் வகையில் கூக்குரல் எழுப்பி அதிருப்தி வெளிப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் சில இடங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் போது அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இவ்வாறு எதிர்ப்பும் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
கனடிய தேசிய கீதம் இசைக்கப்படும் போது ஆதரவினை வெளிப்படுத்தும் ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கும் போது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளின் போது இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.