பிரித்தானிய முன்னாள் பிரதமர் போறிஸ் ஜோன்சன் இராஜினாமா!
பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 58 வயதான போரிஸ் ஜோன்சன், 2019 ஜூலை முதல் 2022 செப்டெம்பர் வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்தார்.
கொவிட் தடுப்பு விதிகளை மீறி விருந்து
கொவிட் தடுப்பு விதிகளை மீறி விருந்து நடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான போறிஸ் ஜோன்சன், பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.
கொவிட் தடுப்பு விதிகளை மீறும் வகையிலான விருந்துகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தொடர்ச்சியாக அவர் பொய் கூறினாரா என்பது தொடர்பில பாராளுமன்றக் குழுவின் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக நேற்று (09) அவர் அறிவித்தார்.