வான்கூவாரில் நூறாண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் மழை
கனடாவின் வான்கூவாரில் நூறாண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்துள்ளது.
வான்கூவர் சர்வதேச விமான நிலைய வானிலை மையத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத அளவு மழை பெய்து புதிய சாதனையை பதிவு செய்தது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடுமையான மழை பெய்துள்ளது.
கடந்த வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை வான்கூவர் விமான நிலையத்தில் (YVR) 43.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
இது 1912இல் பதிவான 26.9 மில்லிமீட்டர் என்ற முந்தைய சாதனையை கிட்டத்தட்ட இரு மடங்காக தகர்த்துள்ளது.
அபோட்ஸ்ஃபோர்ட் ஸ்குவாமிஷ் மற்றும் மேற்கு வான்கூவர் ஆகிய இடங்களிலும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சாதனை அளவு மழை பெய்துள்ளது.
இந்த மழை வீழ்ச்சியானது அந்தப் பகுதிகளில் நிலவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.