கனடாவில் பொக்ஸின டே கொள்வனவில் ஈடுபடும் மக்கள்
கனடாவில் நத்தார் பண்டிகையை அடுத்த நாள் பல்வேறு விலை கழிவுகள் அறிவிக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழமையானதாகும்.
பாக்சிங் தினத்தில் இவ்வாறு விலை கழிவுகள் அறிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ள பொருட்கள் சேவைகள் வரி விடுமுறை மக்களுக்கு பொருள் கொள்வனவின்போது பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு தொடர்பிலான பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் மக்கள் இந்த வரிச் சலுகைகளை பயன்படுத்தி பொருள் கொள்வனவில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர்.
பல்வேறு பொருட்களுக்கு அரசாங்கம் இவ்வாறு வரி விடுமுறை அறிவித்துள்ளது.
சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் உணவு பண்டங்கள், வைன் வகைகள், உணவக உணவுப் பொருட்கள் என பெரும் எண்ணிக்கையிலான பொருட்களுக்கு மத்திய அரசாங்கம் வரி விடுமுறை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பாக்ஸின் தினத்தில் விலை கழிவுகளுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் வரி விடுமுறையையும் பயன்படுத்தி மக்கள் அதிக அளவில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.