பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணை கட்ட சீன அரசு முடிவு
இமயமலையின் மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அணை கட்ட சீனா முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லை திபெத்தில் சீனா 137 பில்லியன் டாலர் அளவில் உலகில் மிகப்பெரிய அணை கட்ட இருப்பதனால் பிரம்மபுத்திராவின் அடிப்பகுதியில் உள்ள மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என இந்திய மாநிலங்கள் மற்றும் வங்கதேச மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.
மேலும், டெக்டோனிக் தட்டு எல்லையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான இமயமலைப் பகுதியாக அணை கட்டப்படும் பகுதி பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரம்மபுத்திரா அணை திட்டம் கரையோர மாநிலங்களை பாதிக்காது. பாதுகாப்பு கவலை குறித்து 10 வருடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்துள்ளோம் என சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மயோ நிங் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய அணையால் அடிவாரம் மற்றும் கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பாடு எனத் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய நதிகளின் வளர்ச்சிக்கு சீனா எப்போதும் பொறுப்பாக இருந்து வருகிறது,
மேலும் திபெத்தில் நீர்மின்சார மேம்பாடு பல தசாப்தங்களாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய திட்டமான இதன் கட்டுமானத்திற்கு கடந்த புதன்கிழமை சீனா அனுமதி வழங்கியுள்ளது. இந்த அணையை கட்ட சுமார் 10 வருடத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.