க்யூபெக்கில் 46 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி
கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் ஒருவர் 46 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற லாட்டோ 6/49 கோல்டு பால் ஜாக்பாட் லொத்தர் சீட்டிலுப்பில் 46 மில்லியன் கனேடிய டாலர் பரிசுத்தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளுது.
இந்த லொத்தர் சீட்டு க்யூபெக் மாகாணத்தில் விற்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெற்றி எண்கள்: 5, 16, 17, 21, 41, 47. போனஸ் எண் : 6 என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதியிலான கோல்டு பால் லாட்டரி ஜாக்பாட் தொகை 10 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லோட்டோ-க்யூபெக் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், வழக்கம்போல் கிளாசிக் ஜாக்பாட் தொகை 5 மில்லியன் டாலராக தொடரும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.