தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் வெற்றி
தென் கொரியாவின் பிரதமரும் தற்காலிக ஜனாதிபதியுமான ஹான் டக்-சூவை (Han Duck-soo) பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நாடளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 192 உறுப்பினர்கள் அவரது பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தென் கொரியாவின் பிரதமரும் தற்காலிக ஜனாதிபதியுமான ஹான் டக்-சூவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை தென் கொரியாவின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியால் (DP) பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க ஹான் டக்-சூ மறுத்ததை அடுத்து பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அவர்கள் தாக்கல் செய்தனர்.
டிசம்பர் 3 அன்று குற்றம் சாட்டப்பட்டு, பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலின் இராணுவச் சட்ட முயற்சிக்கு ஹான் உதவியதாக எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டியது. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவதற்கான முயற்சி தோல்வியுற்தன் பின்னர்
தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் ஹான் டக்-சூ (Han Duck-soo) தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்கத்கது.