கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் கைது
கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போமன்வில்லில் கடந்த சனிக்கிழமை காலை செய்தித் தாள் விநியோகஸ்தர் ஒருவரின் வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கிளாரிங்டன் மற்றும் பிரின்ஸ் வில்லியம் புலவர்ட் சந்திப்பில் ஒரு செய்தித் தாள் விநியோகஸ்தர் தனது காரில் உட்கார்ந்திருந்தபோது, இரண்டு முகமூடி அணிந்த நபர்கள் அருகே வந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்து, பாதிக்கப்பட்டவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இழுத்து வெளியேற்றினார் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் அந்த வாகனத்தை ஏற்றி கொண்டு ஏரியாவிலிருந்து தப்பியோடினர் எனவும் பாதிக்கப்பட்ட நபருக்கு உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் போலீசார் அந்த வாகனத்தை Highway 401 மேற்கு திசையில் பயணம் செய்யும் போது கண்டறிந்தனர்.
பின்னர் Ajax பகுதியில் உள்ள வெஸ்ட்னி சாலையில் வாகனம் விலகி ஒரு மின் தூணில் மோதி நின்றது.
சம்பவ இடத்திலிருந்து இரு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றதாக போலீசார் அவர்களை துரத்தியுள்ளனர்.
அதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர் தப்பி ஓடியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.