உயிரிழந்த தாத்தாவின் சாம்பலைச் சாப்பிட்ட சிறுவன்; தாயார் அதிர்ச்சி
பிரிட்டனில் ஒரு வயதுச் சிறுவன் தவறுதலாகத் தமது உயிரிழந்த தாத்தாவின் சாம்பலைச் சாப்பிட்டதாக பிரிட்டன் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) நடந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காலத்திற்கும் இணைபிரியாமல் இருப்பான்
சிறுவன் வீட்டின் வரவேற்பறையில் விளையாடிக்கொண்டிருந்தான். அவனது தாயார் துணிகளை வைப்பதற்கு மாடியில் உள்ள அறைக்குச் சென்றார். கீழே வந்து பார்த்த தாயாருக்கு அதிர்ச்சி காந்திருந்துள்ளது.
சிறுவன்மீது சாம்பல் கொட்டிக்கிடந்ததுடன் அவனது வாயிலும்சாம்பல் இருப்பதைக் கவனித்தார். தமது தந்தையின் சாம்பலை சிறுவன் தவறுதலாகச் சாப்பிட்டதை உணர்ந்த தாயார் அதிர்ந்துபோனார்.
அந்தக் காட்சியை உடனே காணொளியாகப் பதிவு செய்தார். அதில் அவர் சாம்பல் இருந்த கலன் காலியாக இருப்பதைக் காட்டி பெருமூச்சுவிட்டு தமது மகனின் குறும்புச்செயலை விவரித்தார்.
நல்லவேளையாகச் சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் சொன்னார். தாத்தாவை இதற்கு முன்பு கண்டிராத சிறுவன் இனி அவருடன் காலத்திற்கும் இணைபிரியாமல் இருப்பான் என்று தாயார் வேடிக்கையாகக் கூறினார்.