தந்தையின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு; சிறுமி மருத்துவமனையில்
பிரான்ஸில் தனது குடும்பத்தினரை மிக கொடூரமாக கத்தி ஒன்றின் மூலம் தாக்கியதில் 6 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் Tournan-en-Brie (Seine-et-Marne) நகரில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இங்குள்ள வீடொன்றில் இருந்து பெறப்பட்ட தொலைபேசி அழைப்பை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு 6 வயதுடைய சிறுவன் ஒருவனின் கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளான். அத்தோடு 10 வயதுடைய மற்றொரு மகளும் கத்தியால் வெட்டப்பட்டுள்ளார்.
இசம்பவத்தை அடுத்து தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும் சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிறுமி Necker மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுவனது உடற்கூறு பரிசோதனைகள் இன்று திங்கட்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.