வசகா கடற்கரையில் துயர சம்பவம்: ஹெலிகொப்டரில் மீட்கப்பட்ட இளைஞர் உடல்
பிராம்டனை சேர்ந்த இளைஞர் வசகா கடற்கரையில் பேச்சு மூச்சின்றி மீட்கப்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளார்.
வசகா கடற்கரை பகுதி 2ல் இருந்து சனிக்கிழமை சுமார் 5.30 மணியளவில் 22 வயதான இளைஞர் ஒருவர் மாயமானதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், உரிய அதிகாரிகளின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரம் தேடியுள்ளனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதனையடுத்து ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடிய நிலையில் மூச்சு பேச்சின்றி அந்த இளைஞரின் உடலை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
மேலும், உறவினர்கள் அடையாளம் காணப்படும் வரையில் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.