பிராம்ப்டன் மேயர் பாட்ரிக் பிரவுனுக்கு கொலை மிரட்டல்
பிராம்ப்டன் நகர மேயர் பாட்ரிக் பிரவுன் மீது அண்மையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மிரட்டல் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன் மேயரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வழியாக வந்ததாக, விசாரணையை நெருக்கமாக அறிந்த தகவலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த மின்னஞ்சலில் மேயரின் மனைவியும் மகனும் குறிப்பாகப் பெயரிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
“இந்த மிரட்டல் மேயருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் எதிராக வந்ததைக் கருத்தில் கொண்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேயரின் இல்லம் மற்றும் அவர் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு வாரங்கள் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், விசாரணை சில முன்னேற்றங்களை பெற்றதையடுத்து அந்த பாதுகாப்பு தற்போது திரும்ப அழைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மிரட்டல் கனடாவின் உள்ளிருந்து வந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் நாம் முன்னேறி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.