வீடற்றவர்களுக்காக பிரம்டன் மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்
வீடற்ற மக்களுக்காக கனடாவின் பிரம்டன் பாடசாலை மாணவர்கள் பொருட்களை சேகரித்துள்ளனர்.
இந்த மாணவர்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு காலூறைகளை சேகரித்துள்ளனர்.
வீடற்ற மற்றும் வறுமையில் வாடும் மக்கள் குளிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்குவதனை தவிர்க்கும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன.
குளிர்காலத்தில் காலுறைகள் மிகவும் இன்றியமையாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கால்கள் குளிரானால் ஒட்டுமொத்த உடலும் குளிரை உணர நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
காலை வேளையில் மாணவர்கள் ஒவ்வொரு டொலர்களாக சேகரித்து இவ்வாறு சுமார் ஆயிரத்து ஐநூறு காலுறைகளை சேகரித்து ஏழை மக்களுக்கு வழங்க உள்ளனர்.
காலுறைகள் மட்டுமன்றி உடைகள், உணவு என பல்வேறு பொருட்களை திரட்டி ஏழை மக்களுக்கு உதவுவதற்கு மாணவர்கள் நாட்டம் காட்டி வருவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.