கனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் ஆடை வடிவமைப்பாளர்
கனடாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காகச் செயற்கை முடி வாங்க நிதி திரட்டும் முயற்சியில் ஹாலிஃபாக்ஸ் நகர் ஆடை வடிவமைப்பாளர் ஜான் மைக்கேல் ப்ரூவர், ஈடுபட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர், ஜான் மைக்கேல் ப்ரூவரின் நெருங்கிய தோழிகளில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்.

நிதி திரட்டும் நிகழ்ச்சி
அவரது முதல் நிகழ்ச்சி பெரும் வெற்றியைக் கண்டதால், அடுத்த ஆண்டும் இதேபோன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டபோது, அவரது தோழி உயிரிழந்தார்.
குறித்த நிகழ்ச்சியின் மூலம் அவர் 8,000 டொலருக்கும் மேற்பட்ட தொகையை மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இதனால், ப்ரூவர் தனது வடிவமைப்புத் திறனை பல சமூக நல முயற்சிகளுக்காகப் பயன்படுத்தி வம் நிலையில் தற்போது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காகச் செயற்கை முடி வாங்க நிதி திரட்டும் முயற்சியில் ஜான் மைக்கேல் ப்ரூவர் ஈடுபட்டுள்ளார்.