கனடாவில் இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் ஆபத்தான நோய்
கனடாவில் இளைய தலைமுறையினர் மத்தியில் மார்கப் புற்று நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20, 30 மற்றும் 40 வயதுகளை உடையவர்கள் மத்தியில் மார்கப் புற்று நோய் அதிகரித்துச் செல்வதாக ஒட்டாவா பல்கலைக்கழக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1984 – 1988ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2015 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இளம் வயது மார்பகப் புற்று நோயாளர் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பொதுவாக 20 மற்றும் 30 வயதான பெண்களிடம் மார்பகப் புற்று நோய் தொடர்பிலான பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இள வயது புற்று நோயாளர்களை முன்கூட்டியே அடையாளம் காணும் வகையிலான பரிசோதனைகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.