கனடாவில் வானில் தோன்றிய வெளிச்சம்; பீதியடைந்த மக்கள்
கனடாவில் வானில் தோன்றிய பிரகாசமான வெளிச்சம் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கனடாவின் தென்மேற்கு ஒன்றாரியோவில் இவ்வாறு பிரகாசமான வெளிச்சம் தென்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு வானில் வழமைக்கு மாறான வெளிச்சம் தோன்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் இராட்சத உளவு பலூன்கள் தொடர்பிலான பரபரப்பு ஓயாத நிலையில் இந்த வெளிச்சம் தென்பட்டுள்ளது.
ஒளிக் கற்றைகளுடன் வானில் மர்ம பொருட்கள் பறந்து செல்வதனை பலர் காணொளிகளாக சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.
எனினும் இந்த வெளிச்சம் வேற்று கிரகவாசிகளினாலோ அல்லது உளவு பலூன்களினாலோ உருவானதல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் லிங்க் எனப்படும் செய்மதி தொகுதிகளே இவ்வாறு தென்பட்டுள்ளதாக வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் வானியல் நிபுணர் மிச்சல் பிச் தெரிவித்துள்ளார்.
செல்லிடப்பேசி கட்டமைப்புக்களுக்கு உதவும் வகையில் பிரபல தொழிலதிபர் எலொன் மஸ்க் இந்த செய்மதிகளை ஏவியுள்ளனர்.