பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்; குற்றப்பணம் அறவீடு
பிரான்ஸின் முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என அவதூறு பரப்பிய இரு பெண்களுக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
ஊடகத்துறையில் பணிபுரியும் இரு பெண்களும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூடியூப் தளமொன்றில் இது தொடர்பில் சில சர்ச்சைக் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

அதை அடுத்து பிரிஜித் மக்ரோனின் சகோதரர் ஒருவர் கடும் கோபம் கொண்டு இதனைக் கண்டித்ததுடன், அவர்கள் மீது வழக்கும் தொடுத்தனர். இந்நிலையில், செப்டம்பர் 12 ஆம் திகதி நேற்றையதினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இரு பெண்களும் , பிரிஜித் மக்ரோனுக்கு 8,000 யூரோக்கள் இழப்பீடும், வழக்கு தொடுத்த அவரது சகோதரருக்கு 5,000 யூரோக்களும் குற்றப்பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        