யுக்ரைனுக்கு பிரித்தானியா அளித்த பயிற்சி
ரஷ்ய படையினருடனான யுத்தத்தில் காற்றடைக்கப்பட்ட இராணுவத் தாங்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் யுக்ரைனிய படையினருக்கு பிரித்தானிய இராணுவம் பயிற்சி வழங்கி வருகிறது.
T-72 ரக தாங்கிகளின் தோற்றத்தில் இந்த போலி இராணுவத் தாங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.ரஷ்ய படையினருக்கு தென்படக்கூடிய வகையில் இப்போலி தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய படையினரை ஏமாற்றும் வகையில் இத்தாங்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் யுக்ரைனியப் படையினருக்கு பிரித்தானிய இராணுவத்தின் விசேட வான் சேவைப் பிரிவு பயிற்சிகளை வழங்கி வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, யுக்ரைனின் ஸபோரிஸ்ஸியா அணு மின் நிலையத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து சர்வதேச அணுசக்தி முகவரகம் கவலை தெரிவித்துள்ளது. அணுசக்தி பேரழிவு ஏற்படக்கூடிய அபாயத்தை இந்நடவடிக்கை உணர்த்துவதாக அம்முகவரகம் தெரிவித்துள்ளது.