ஏதிலிகள் குறித்து பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கையால் வலுக்கும் விமர்சனம்
பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, ஷபானாவின் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பெயர்தல் தொடர்பில் அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர்தல் பின்னணி கொண்டவரான ஷபானா, புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றமை பரவலாக சர்வதேச அரங்கில் பேசப்படுகிறது.
கடந்த காலங்களில் புகலிடக் கோரிக்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ஷபானா, தற்போது புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக அவரே கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முறைப்படி ஏதிலி நிலை பெற்றவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற ஷபானா திட்டமிட்டு வருவதாகவும் பதவியும் வசதியும் வந்ததும் பழையதை மறந்துவிட்டு ஷபானா போலி முகம் காட்டி வருவதாக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.