பிரித்தானியாவின் புதிய பிரதிப் பிரதமராக புதியவர் தெரிவு!
பிரித்தானியாவின் பிரதிப் பிரதமராக இருந்த டொமினிக் ராப் இராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதிப் பிரதமராக ஒலிவர் டவுடென் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பிரதிப்பிரதமரும், நீதி அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
டொமினிக் ராப் இராஜினாமா
இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார்.
இந்த நிலையில் விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்த நிலையில், பிரதிப் பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
டொமினிக் ராப் இராஜினாமா செய்ததை அடுத்து ஒலிவர் டவுடென் பிரித்தானியாவின் புதிய பிரதிப்பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அலெக்ஸ் சாக் புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.