ஈரானில் பிரித்தானிய தம்பதி கைது! விபரீதமாக முடிந்த மோட்டார் சைக்கிள் பயணம்
ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பெயர்களை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி
கிரேக்(Craig) மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன்(Lindsay Foreman) என்ற பிரிட்டிஷ் தம்பதியினர் ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த "கவலைக்கிடமான சூழ்நிலை" குறித்து ஃபோர்மேன் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
அவர்களின் விடுதலைக்காக பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பயணம்
லிண்ட்சே ஃபோர்மேனின் சமூக ஊடக பதிவுகளின் படி, தம்பதியினர் நேர்மறை உளவியல் முயற்சியின் ஒரு பகுதியாக பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வந்தனர்.
ஈரான் நுழைவதற்கு சற்று முன்பு, டிசம்பர் 30 ஆம் திகதி, அவர்கள் பயணத்தின் "மிகவும் சவாலான" பகுதிகளான ஈரான் மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ளப் போவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
கைதுக்கான குறிப்பிட்ட காரணங்களை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும், ஈரான் அரசு ஊடகங்கள் புதன்கிழமையன்று ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஈரான் நாட்டின் தென்கிழக்கு நகரமான கெர்மனில் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தூதரக உதவிகள்
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரித்தானிய குடிமக்களுக்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் UK வெளியுறவு அலுவலகம் உறுதி செய்துள்ளது.
மேலும், ஈரானில் கைது, தடுப்பு மற்றும் மரண தண்டனை" ஆபத்து இருப்பதால் ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு வெளியுறவு அலுவலகம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.