உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்ற குடும்பம்; பயணிகள் திகைப்பு
பிரித்தானிய குடும்பம் ஒன்றின் மீது, உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குழப்பத்தால் விமானம் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மருத்துவக் குழுவின பரிசோதனைர்
டிசம்பர் 18 அன்று, ஸ்பெயினின் மலகா நகரிலிருந்து லண்டனின் கேட்விக் நோக்கிப் பறக்க இருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்திற்குள், 89 வயது மூதாட்டியின் உடலை பிரித்தானிய குடும்பம் ஒன்று கொண்டு வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய ஊழியர்களிடம் மூதாட்டி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் சோர்வாக இருப்பதாகவும் குறிப்பிட்டு சக்கர நாற்காலியில் மூதாட்டியின் உடலத்தை அந்த குடும்பத்தினர் விமானத்தில் ஏற்றியுள்ளனர்.
ஆனால் நேரில் பார்த்த சக பயணிகள் மற்றும் விமானப் பணிப் பெண்கள் சந்தேகமடைந்து, மூதாட்டி அசைவின்றி இருப்பதாக விமானிக்கு தகவல் தெரிவித்த நிலையில், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அங்கு விமான நிலையத்தில் அவசர கால மருத்துவக் குழுவினர் மூதாட்டியைப் பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் ஈசி ஜெட் விமான நிறுவனம் வழங்கிய தகவலில், சம்பந்தப்பட்ட பிரித்தானிய குடும்பத்தினர் மூதாட்டி பயணம் செய்யத் தகுதியானவர் என்ற (Fit to Fly) என்ற முறையான மருத்துவ சான்றிதழை வைத்து இருந்ததால் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை விமான நிறுவனம் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என அழுத்தம் அதிகரித்துள்ளது.