செயற்கை நுண்ணறிவை தகாத முறையில் பயன்படுத்திய நபருக்கு சிறை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தகாத முறையில் பயன்படுத்திய நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த குறித்த நபருக்கு பதினெட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
[EHSWCM ]
27 வயதான ஹக் நெல்சன் என்ற நபரே இவ்வாறு சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த நபருக்கு நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்களை உருவாக்கி பிரசூரித்தார் என குறித்த நபர் மீது மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.