வீட்டு வாடகையை உயர்த்தியதால் இராஜினாமா செய்த பிரிட்டன் அமைச்சர்
பிரிட்டனின் வீட்டற்றோர் நலத்துறை அமைச்சர் ருஷனாரா அலி (Rushanara Ali) சர்ச்சைக்கு சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகின்றது.
ருஷனாரா அலி (Rushanara Ali) லண்டனில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றி, மாத வாடகையை 700 பவுண்ட் அதிகரித்து வேறொருவருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகின்றது.
இது சர்ச்சையான நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) எழுதிய கடிதத்தில், தான் பதவியில் தொடர்ந்தால், அரசின் லட்சியப் பணிகளுக்கு ஒரு குறுக்கீடாக இருக்கும் என ருஷனாரா அலி (Rushanara Ali) குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், தான் எல்லா நேரங்களிலும் அனைத்து சட்டத் நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், தனது பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் அவர் (Rushanara Ali)தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), ருஷனாரா அலியின் (Rushanara Ali) கடின உழைப்பை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தார்.