லண்டனில் புத்தாண்டை வானவேடிக்கையுடன் கொண்டாடிய பிரித்தானியர்கள்!
கோவிட் தொற்று பரவலுக்கு பின்னர் முதன்முறையாக வானவேடிக்கைகள் மற்றும் தெரு விருந்துகளுடன் பிரித்தானியர்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்.
குளிரான வானிலை இருந்தபோதிலும், பொது மக்கள் தயங்காமல் வீதிகளில் இறங்கி புத்தாண்டை வரவேற்றனர்.
மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லண்டனின் முன்னெடுக்கப்பட்ட வானவேடிக்கை 100,000 க்கும் அதிகமான மக்களை ஈர்த்திருந்தது.
மேலும் எடின்பரோவில், உலகப் புகழ்பெற்ற ஹோக்மனே தெரு விருந்தில் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
லண்டனில் நடந்த 12 நிமிட வானவேடிக்கையைக் காண தேம்ஸ் கரையோரத்தில் மக்கள் கூடுவது 2019க்குப் பிறகு இதுவே முதல் முறை ஆகும்.
இது ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய நிகழ்வு என்று நகரத்தின் மேயர் சாதிக் கான் விவரித்தார்.
மேலும் பிக் பென் ஒலிக்கத் தொடங்கியதும், புதிய ஆண்டை வரவேற்பதற்காக லண்டனின் சரமாரியாக வானவேடிக்கையுடன் வண்ணத்தில் வெடிப்பதற்கு முன்பு, கூட்டத்தை கணக்கிட உதவும் வகையில் ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டன.