பூஸ்டர் டோஸை போட்டுக்கொண்ட பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கொரோனா தடுப்பூசியின் ‘பூஸ்டர்’ டோஸை போட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளிட்ட பதிவில் தெரிவித்தது, “இப்போதுதான் ‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்டேன். உங்கள் முறை வரும்போது, தயவுசெய்து உயிர்காக்கும் இந்த ‘பூஸ்டர்’ டோஸை போட்டுக்கொள்ளுங்கள். நாம் வைரசஸுக்கு 2-வது வாய்ப்பு அளித்து விடக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளான பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) 10 நாட்கள் வரை தீவிர சிகிச்சை பெற்று, தொற்றில் இருந்து மீண்டது நினைவுகூரத்தக்கது.
பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒருநாளில் 53 ஆயிரத்து 945 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 141 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.