உக்ரைனுக்காக போரிட்ட பிரித்தானிய பிரஜைக்கு ரஷ்யா தண்டனை
உக்ரைனில் சார்பில் போரிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிட்டன் முன்னாள் சிப்பாய் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஹெய்டன் டேவிஸ் என்ற படைச் சிப்பாய்க்கு இவ்வாறு தண்டனை விதிகக்ப்பட்டுள்ளது.
அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூலிப்படை வீரர்
ரஷ்யா “கூலிப்படை வீரர் ” என அழைக்கும் ஹெய்டன் டேவிஸ், 2024 இறுதி அல்லது 2025 ஆரம்பத்தில், உக்ரைனின் Donbas பகுதியில், உக்ரைன் வெளிநாட்டு படைப் பிரிவில் (Foreign Legion) சேவையாற்றிக் கொண்டிருந்த போது பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டேவிஸ் மீது விசாரணை நடைபெற்றது, தற்போது மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள Donetsk நகரிலுள்ள ரஷ்ய ஆதரவு நீதிமன்றத்தில்.
ரஷ்ய வழக்கறிஞர்கள் வெளியிட்ட புகைப்படங்களில், தலையெங்கும் முடி சீவப்பட்ட நிலையில், கம்பிகளால் சூழப்பட்ட கூண்டுக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தது காணப்படுகிறது.
2024 ஆகஸ்ட் மாதம் உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த டேவிஸ், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற காணொளியில், பிரிட்டன் உச்சரிப்புடன் பேசும் ஒருவர், மொழிபெயர்ப்பாளர் மூலமாக, தாம் உக்ரைன் இராணுவத்தின் வெளிநாட்டு படைப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், போலந்து வழியாக பேருந்தில் உக்ரைனுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
மாத சம்பளமாக 400 முதல் 500 அமெரிக்க டொலர் வரை பெற்றதாகவும், குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறீர்களா என கேட்கப்பட்ட போது “ஆம்” என பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் இந்த தண்டனை விதிப்பிற்கு பிரித்தானியா கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.