கனடாவில் வாகன ஓட்டுனருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கனடாவின் நியு டெஸ்மெட்ச் பகுதியில், டிரக்கின் மேல் பெரிய பனி மற்றும் உறைபனி கட்டி இருந்ததை காவல்துறை கவனித்ததையடுத்து, ஒரு பாரவூர்தி ஓட்டுநருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை 89ல் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரவூர்தியின் மேல் பெரிய அளவிலான பனி மற்றும் உறைபனி காணப்பட்டதை தொடர்ந்து, வணிக சரக்கு டிரக் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து, வணிக வாகனத்தில் பாதுகாப்பற்ற சுமை (insecure load) வைத்திருந்ததாக ஓட்டுநருக்கு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
“வாகனங்களில் இருந்து பனி மற்றும் உறைபனி கீழே விழுவது, பிற சாலை பயனாளர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தலாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துகளைத் தவிர்க்க, பயணம் தொடங்குவதற்கு முன் வாகனங்களில் உள்ள பனி மற்றும் உறைபனிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலை பாதுகாப்பு, சக்கரங்கள் நகரும் முன்பே தொடங்குகிறது. தயவுசெய்து பயணம் தொடங்குவதற்கு முன் உங்கள் வாகனத்தை முறையாக சுத்தம் செய்யுங்கள் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.