தம்பியை தவறுதலாக சுட்ட அண்ணன் ; அமெரிக்காவில் பலியான இந்திய மாணவர்
அமெரிக்காவில் இந்தியர் தனது அண்ணனால் தவறுதலாக சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 24 வயதான இவர் அமெரிக்காவின் லாங் ஐலண்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார்.

தவறுதலாக வெடித்த துப்பாக்கி
அவர் தனது மூத்த சகோதரர் முகமது பஷீர் அகமது உடன் நியூ யார்க் நகரில் ஹிக்ஸ்வில்லில் உள்ள 459 சவுத் பிராட்வே அருகே காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அண்ணன் பஷீர் அகமது கையில் இருந்து கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தது.
இதில் தம்பி இப்ராஹிம் முகமது முதுகில் தோட்டா பாய்ந்தது. இப்ராஹிம் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அந்தக் கைத்துப்பாக்கி எப்படி காரில் வந்தது அல்லது அது எப்படிச் சுட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
காவல்துறை விசாரணையை தொடர்ந்து, பஷீர் கைது செய்யப்பட்டார்.
தனது அடுத்த விசாரணைக்காக அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.