யாழில் தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனுக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணத்தில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேறையதினம் (18-03-2023) உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த ஆண்டு (2022) நம்பவர் மாதத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.
இந்த சம்பவத்தில் 22 வயதுடைய சந்தேக நபரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சிறுமியான குறித்த தங்கை கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும், தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த நபரை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.